sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறுபான்மையினருக்கு 10 சிறப்பு கல்லுாரிகள் தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு

சிறுபான்மையினருக்கு 10 சிறப்பு கல்லுாரிகள் தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு

சிறுபான்மையினருக்கு 10 சிறப்பு கல்லுாரிகள் தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு


UPDATED : மே 10, 2026 09:55 PM

ADDED : மே 10, 2026 09:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 09:55 PM ADDED : மே 10, 2026 09:59 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹைதராபாத்:
“தெலுங்கானாவில், 10 மாவட்டங்களில், சிறுபான்மையினருக்காக தனித்துவமான சிறப்பு கல்லுாரிகள் நிறுவப்படும்,” என, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

தெலுங்கானாவில், சிறுபான்மையினர் நலன் குறித்து, காங்கிரசைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தெலுங்கானா அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெலுங்கானாவில், 10 மாவட்டங்களில், சிறுபான்மையினருக்காக தனித்துவமான சிறப்பு பட்டப்படிப்பு கல்லுாரிகள் அமைக்கப்படும்.

இந்த கல்லுாரிகள் வெறும் பாரம்பரிய படிப்புகளை மட்டும் வழங்காமல், மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிற்சிகளையும் வழங்கும்.

பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி., சமூகங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படுவதை போலவே, சிறுபான்மையின மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.

குரூப் - 1, குரூப் - 2 மற்றும் குரூப் - 3 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற சிறுபான்மையின இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறுபான்மையினர் நலத்துறையில் பொறுப்புகளை வழங்கி, துறை சார்ந்த திட்டங்களை பற்றி முழுமையாக புரிந்துகொள்ள வழிகாட்டப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us