sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காஞ்சியில் 10ம் வகுப்பு தேர்வில் 94.61 சதவீதம் தேர்ச்சி 0.24 சதவீதம் குறைந்ததால் 19வது இடம்

காஞ்சியில் 10ம் வகுப்பு தேர்வில் 94.61 சதவீதம் தேர்ச்சி 0.24 சதவீதம் குறைந்ததால் 19வது இடம்

காஞ்சியில் 10ம் வகுப்பு தேர்வில் 94.61 சதவீதம் தேர்ச்சி 0.24 சதவீதம் குறைந்ததால் 19வது இடம்


UPDATED : மே 21, 2026 04:09 PM

ADDED : மே 21, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2026 04:09 PM ADDED : மே 21, 2026 04:11 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 0.24 சதவீதம் குறைந்து, 94.61 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 15வது இடத்திலிருந்து 19வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகம் முழுதும் நேற்று வெளியிடப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாணவ மாணவியர் தங்களின் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விபரங்களை மொபைல் போன்களில் ஆர்வத்துடன் பார்த்து தெரிந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 184 பள்ளிகளைச் சேர்ந்த, 7,604 மாணவர்கள், 7,677 மாணவியர் என, 15,281 பேர் தேர்வில் பங்கேற்றனர்.

இதில், 14,458 மாணவ மாணவியர் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 94.61 சதவீதமாகும். கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 94.85 ஆக இருந்தது. கடந்தாண்டை காட்டிலும், 0.24 சதவீதம் இந்தாண்டு குறைந்திருப்பது கல்வித்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் 92.75 சதவீதமும், மாணவியர் 96.46 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை காட்டிலும், மாணவியர் 3.71 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மாவட்ட வாரியான தர வரிசையில், 19வது இடத்தை காஞ்சிபுரம் பெற்றுள்ளது. கடந் தாண்டு 15வது இடத்தில் இருந்தது. நடப்பாண்டில் 4 இடங்கள் பின்தங்கியுள்ளது.

அரசு பள்ளிகளை பொறுத்தவரையில், 100 பள்ளிகள் 10ம் வகுப்பு தேர்வில் பங்கேற்றது. இதில், 8,290 மாணவ - மாணவியர் தேர்வில் பங்கேற்றதில், 7,719 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 93.11 சதவீத தேர்ச்சியாகும்.

78 பள்ளிகள் 100 சதவீதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 184 பள்ளிகள் 10ம் வகுப்பு தேர்வில் பங்கேற்றன. இதில், 31 அரசு பள்ளிகள் உட்பட 78 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில், ஈஞ்சம்பாக்கம், சென்னகுப்பம்.

தண்டலம் மற்றும் ரெட்டமங்கலம் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், மணிமங்கலம் மாதிரி பள்ளி, ஏனாத்துார், பண்ருட்டி, செங்காடு, புரிசை உள்ளிட்ட 31 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

351 மாணவர்கள் தோல்வி பாட வாரியான தேர்ச்சி சதவீதத்தை பார்க்கும்போது, தமிழ் மொழியில் அதிக மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். தேர்வெழுதி 15,281 மாணவர்களில் 823 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

மொழிப்பாடமான தமிழ் பாடத்திலேயே, 351 பேர் தோல்வியடைந்திருப்பது கல்வித் துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிற வகையான பாடங்களை காட்டிலும், ஆங்கில பாடத்தில் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில், 99.41 சதவீதம் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழை காட் டிலும், ஆங்கிலத்தில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றிருப்பது, கல்வித் துறையினர் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

தேர்வில் பங்கேற்ற பள்ளிகள் விபரம் - பள்ளி நிர்வாகம் எண்ணிக்கை



அரசு பள்ளிகள் - 89

நகராட்சி பள்ளிகள் - 4

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள்- 6

அரசு உதவி பெறும் பள்ளிகள் 19

தனியார் பள்ளிகள் 61

மொத்த பள்ளிகள் 184

பாட வாரியாக சென்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விபரம்


பாடம் - சென்டம் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை

தமிழ் 0

ஆங்கிலம் 0

கணிதம் 52

அறிவியல் 73

சமூக அறிவியல் 8

மொத்தம் 133

பள்ளி நிர்வாக வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்


பள்ளிகளின் வகைகள் - தேர்வெழுதியோர் - தேர்ச்சி பெற்றோர் சதவீதம்

ஆதிதிராவிடர் நலத்துறை - 264 - 258 - 97.73

அரசு உதவி - 820 - 734 - 89.51

நகராட்சி - 306 - 290 - 94.77

அரசு உதவி (பகுதி) - 1,086 - 1,030 - 94.84

அரசு பள்ளிகள் - 7,711 - 7,166 - 92.93

மெட்ரிக் பள்ளிகள் - 4,927 - 4,838 - 98.19

சுயநிதி பள்ளிகள் - 158 - 137 - 86.71

சமூக நலத்துறை - 9 - 5 - 55.56

மொத்தம் - 15,281 - 14,458 - 94.61

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாட வாரியான தேர்ச்சி சதவீத விபரம்


பாடம் - தேர்வெழுதியோர் - தேர்ச்சி பெற்றோர் - சதவீதம்

தமிழ் 15,281 - 14,930 - 97.70

ஆங்கிலம் - 15,281 - 15,191 - 99.41

கணிதம் - 15,281 - 14,962 - 97.91

அறிவியல் - 15,281 - 15,045 - 98.46

சமூக அறிவியல் - 15,281 - 15,083 - 98.70

விருப்ப மொழிப்பாடம் - 134 - 134 - 100

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us