UPDATED : ஜன 24, 2025 12:00 AM
ADDED : ஜன 24, 2025 11:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், சரியான கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி உள்ளதால், அவற்றை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதன் அடிப்படையில், சென்ட் மேரிஸ் தெரு, ஈஸ்வரி நகர், ராஜா ஜோசப் காலனி, பாரதி நகர் 2வது தெரு, உழவர் சந்தை, பி.வி.வைத்தியலிங்கம் சாலை, அயோத்திதாசர் பண்டிதர் தெரு, மணி நாயக்கர் தெரு, காந்தி நகர், கோதண்டன் நகர், சேம்பர்ஸ் காலனி, மகாலட்சுமி காலனி உள்ளிட்ட 12 அங்கன்வாடி மையங்களில், 1.9 கோடி ரூபாய் செலவில், கழிப்பறை பழுது பார்த்தல், புதிய கழிப்பறை கட்டுதல், குடிநீர் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.