தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பஞ்சாபில் 13 புதிய கல்லூரிகள்

பஞ்சாபில் 13 புதிய கல்லூரிகள்

பஞ்சாபில் 13 புதிய கல்லூரிகள்


UPDATED : நவ 16, 2009 12:00 AM

ADDED : நவ 16, 2009 03:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2009 12:00 AM ADDED : நவ 16, 2009 03:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மொகாலி: பஞ்சாபில் அடுத்த ஆண்டு ரூ.104 கோடி செலவில் 13 புதிய கல்லூரிகள் துவக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பிரகாஷ் சிங் படால் தெரிவித்துள்ளார்.


பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின்படி, அமிர்தசரஸ், பாதிண்டா, பரித்கோட், பாட்டியாலா, மோகா, மான்ஷா, பெரோஷப்பூர் போன்ற கல்வி ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில் இந்த புதிய கல்லூரிகள் நிறுவப்படும்.  உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாதிண்டாவில் மத்திய பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு, வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.


அடுத்ததாக, அமிர்தசரஸ் மாவட்டத்தில் 700 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த மத்திய பல்கலைக்கழகம் துவக்கப்படும். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி துவக்க சண்டிகரில் இருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள ரோபர் பகுதியில் 501 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. தற்சமயம், அரசு பாலிடெக்னிக் கட்டடத்தில் இந்தாண்டே ஐ.ஐ.டி., வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரகாஷ் சிங் மேலும் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us