தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுகாதாரத்துறையில் 144 பணியிடங்களுக்கு... போட்டி தேர்வு; இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சுகாதாரத்துறையில் 144 பணியிடங்களுக்கு... போட்டி தேர்வு; இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சுகாதாரத்துறையில் 144 பணியிடங்களுக்கு... போட்டி தேர்வு; இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 04, 2025 12:00 AM

ADDED : ஜூன் 04, 2025 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2025 12:00 AM ADDED : ஜூன் 04, 2025 10:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
சுகாதாரத் துறையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 144 காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்விற்குஇன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமி ஆட்சி பொறுப்பேற்றதும், அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார். அதன்படி போலீஸ், தீயணைப்பு, பொதுப்பணி மற்றும் வருவாய் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

ஆனால், சுகாதாரத்துறையில் செவிலியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டது. பிற பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இதனால், பணியில் இருப்பவர்கள் பணிச்சுமையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். நிலமையை சமாளிக்க சுகாதார துறையில் காலி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த ஒப்பந்த முறை வேலைவாய்ப்பால், மருத்துவ துறையில் லேப் டெக்னீஷியன்கள், கண் மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர்கள், சுகாதார உதவியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், மருந்தாளுநர்கள், டென்டல் ஹைஜீனிஸ்ட், எக்ஸ்ரே டெக்னீசியன், எம்.ஆர்.ஐ., டெக்னிஷியன் , கேத் லேப் டெக்னீஷியன், பிசியோதெரபிஸ்ட், ஸ்பீச் தெரபிஸ்ட் , ஆடியாலஜிஸ்ட், டெக்னீஷியன் படிப்புகள் முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. மேலும், சுகாதாரத்துறையில் அனைத்து காலிப் பணியிடங்களும் நிரந்தர பணியிடமாக நிரப்பிட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறையில் ஏ.என்.எம்., (மகப்பேறு உதவியாளர்) -53; இ.சி.ஜி., டெக்னீஷியன்-7; பார்மசிஸ்ட்-43; சுகாதார உதவியாளர் (ெஹல்த் அசிஸ்டெண்ட்)-24; ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டண்ட் 17 என மொத்தம் 144 பணியிடங்கள் போட்டித் தேர்வு மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பிட சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இத்தேர்விற்கான விண்ணப்பம், காலி பணியிடங்கள், இட ஒதுக்கீடு விபரம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை குறித்த விபரங்களை அரசின் https://recruitment.py.gov.in என்ற இணையத்தில் இன்று 4ம் தேதி காலை 10 மணி முதல் பார்வையிடலாம். மேலும், விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் வரும் 24ம் தேதி மாலை 3.௦௦ மணிக்குள் வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us