நவ., 15ம் தேதி சேத்தியாதோப்பில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
நவ., 15ம் தேதி சேத்தியாதோப்பில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
UPDATED : நவ 14, 2014 12:00 AM
ADDED : நவ 14, 2014 11:47 AM
கடலூர்: சேத்தியாதோப்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான ‘தினமலர்’ கல்விமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நவ., 15ம் தேதி நடக்கிறது.
‘தினமலர்’ நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமி வழங்கும் ‘தினமலர்’ கல்விமலர் சார்பில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் ஜெயித்துக் காட்டுவோம் என்ற தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சி நாளை (15ம் தேதி) சேத்தியாத்தோப்பு கே.பி.டி., திருமண மகாலில் காலை 8:30 மணிக்கு துவங்குகிறது. நிகழ்ச்சியில், அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வை எதிர்கொள்வது மற்றும் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகள் வழங்கப்படுகிறது.
பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு குறிப்பெடுக்க இலவசமாக நோட்டு, பேனா, முக்கிய வினாக்கள் அடங்கிய புளூபிரின்ட், உடம்பும் மனசும் நல்லா இருக்கணும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் கண்டிப்பாக சீருடையில் வர வேண்டும்.

