UPDATED : பிப் 04, 2025 12:00 AM
ADDED : பிப் 04, 2025 08:37 AM

சென்னை :
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, 16 ஆதிதிராவிட நல பள்ளிகளுக்கு, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரியலுார் மாவட்டம் வெத்தியார்வெட்டு, திருப்பத்துார் மாவட்டம் ஆலங்காயம், திருவாரூர் மாவட்டம் அபிஷேககட்டளை, கரூர் மாவட்டம் கோட்டைமேடு, விருதுநகர் மாவட்டம் சுந்தரராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டம் இரும்பேடு, திருவண்ணாமலை மாவட்டம் அரசன்குப்பம், திருச்சி மாவட்டம் கல்லக்குடி, விருதுநகர் மாவட்டம் கரிசல்குளம்பட்டி, சென்னை மாவட்டம் பாலவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கடிதம் வாயிலாக, நேரடியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோல, திருச்சி மாவட்டம் பாம்பாட்டிப்பட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மணமை, பெரம்பலுார் மாவட்டம் பசும்பலுார், திருப்பத்துார் மாவட்டம் ஜடையனுார், கரூர் மாவட்டம் புன்னம் ஆகிய பள்ளிகளிலும் நேரடி நியமனம் வாயிலாக, ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
முற்றிலும் தற்காலிக பணியிடங்களாகக் கூறப்பட்ட இந்த நியமனத்தை எதிர்த்து, பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த அமைச்சு பணியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதில் அளித்த தீர்ப்பு அடிப்படையில், அந்த, 16 ஆசிரியர்கள் நியமனமும் ரத்து செய்யப்படுவதாக, ஆதிதிராவிட நலத்துறை கமிஷனர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.