UPDATED : மே 27, 2016 12:00 AM
ADDED : மே 27, 2016 10:50 AM
பத்தாம் வகுப்பு தேர்வில், சென்னையில் நான்கு அரசுப்பள்ளிகள் உட்பட, 20 அரசுத்துறை பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அதேபோல், 32 பள்ளிகள், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன.
52,668 பேர்
பத்தாம் வகுப்பு
தேர்ச்சி குறித்து, முதன்மை கல்வி அதிகாரி அனிதா வெளியிட்ட
தகவல்:
பத்தாம் வகுப்பு
தேர்வில், 574 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை
சேர்ந்த, 52,668 பேர் பங்கேற்றனர். இவர்களில்,
49,638 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.25 சதவீதம் ஆகும். சென்னையில் மொத்தம், 167 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
இவற்றில்,
சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள்
பள்ளி, வியாசர்பாடி பக்தவத்சலம் காலனி அரசு
உயர்நிலைப்பள்ளி, கொடுங்கையூர் அரசு உயர்நிலைப்பள்ளி,
தி.நகர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய
அரசு பள்ளிகளும், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள,
16 சென்னை பள்ளிகளும், 100 சதவீத தேர்ச்சிப் பட்டியலில் உள்ளன.
சிறப்புப்
பள்ளிகளில், அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள லிட்டில்
பிளவர் கண் பார்வையற்றோர், பேச்சு, செவித்திறன் குறைவுற்றோருக்கான பள்ளியில், சந்தியா, சரண்யா மற்றும் பொற்கொடி மாணவியர்,
மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப்
பெற்றுள்ளனர்.
சூளைமேடு பள்ளி
சென்னையில்
மாவட்ட அளவில், விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா
அரசு பெண்கள் பள்ளி மாணவி கேத்தரின் அமலராகினி, 495 மதிப்பெண் பெற்று, முதலிடம் பெற்றார்.
அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனபிரியா, சூளைமேடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரம்மநாயகி, 493 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், சூளைமேடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா, 491 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
