UPDATED : நவ 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
லண்டன்: பிரிட்டனில் கடந்த 11 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாக 18 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் துவங்கிய பொருளாதார நெருக்கடி அனைத்து நாடுகளையும் வெகுவாக பாதித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் நிலைமை மோசமாகி வருகிறது. இப்போது வேலை இல்லாதோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நிதி நிறுவனங்கள், வங்கிகள் எல்லாம் ஆட்டம் கண்டுள்ளன. ஐரோப்பிய மத்திய வங்கி, பணப் புழக்கத்தை அதிகரிக்க பல சலுகைகளை அறிவித்தது. பல நிறுவனங்கள் நிலைமையை சமாளிக்க ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின.
இதன் காரணமாக, பிரிட்டனில் ஒரு பக்கம் வேலையிழப்போர் எண்ணிக்கை கூடிவருகிறது. நிலைமை இப்படியே போனால் இன்னும் சில மாதங்களில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தொடும் என பொருளாதார வல்லுனர்கள கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் வேலையிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரம். இது நவம்பர் மாதம் வரையிலான மூன்று மாத காலத்தில் 18 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் போது, 5.4 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக அதிகரித்து<ள்ளது. வேலையில்லாதோருக்கு, வேலை தேடுவதற்காக அரசு வழங்கும் அலவன்ஸ் தொகை பலநுõறு மடங்கு அதிகரித்துள்ளது.
உற்பத்தி பிரிவில் வேலை வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளன. இன்னும் நிலைமை மோசமாகும் என்று கூறப்படுகிறது.
