பிளஸ் 2 காலாண்டு தேர்வு வினாத்தாள் லீக்? தவறான தகவல் என அதிகாரிகள் விளக்கம்
பிளஸ் 2 காலாண்டு தேர்வு வினாத்தாள் லீக்? தவறான தகவல் என அதிகாரிகள் விளக்கம்
UPDATED : செப் 24, 2024 12:00 AM
ADDED : செப் 24, 2024 10:11 AM

விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 காலாண்டு தேர்வு கணித பாட வினாத்தாள் வெளியானதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. விசாரணையில், தவறான தகவல் என தெரிய வந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று கணிதம் பாடத்திற்கான தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காலாண்டு தேர்வுக்கான கணித பாட வினாத் தாள் என குறிப்பிட்டு, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களின் சமூக வலைதள குழுவில் பரவியதால் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து நேற்று காலை கணித பாடத்திற்கான தேர்வு நடந்தது.
சமூக வலைதளத்தில் பரவிய வினாத்தாள் குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, இன்று (நேற்று) காலை மாணவர்களுக்கு தேர்வு எழுத வழங்கிய கணித பாடத்திற்கான வினாத்தாள், சமூக வலைதளத்தில் பரவிய வினாத்தாள் அல்ல. சமீப காலமாக ஒவ்வொரு காலாண்டு, அரையாண்டு, பொதுத் தேர்வு நேரங்களில் சமூக வலைதளங்களில் இது போன்ற போலி வினாத்தாள்களை சில விஷமிகள் பகிர்ந்து மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்தனர்.