தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 பொதுத்தேர்வு: மதிப்பெண் பட்டியல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான முக்கிய அறிவிப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு: மதிப்பெண் பட்டியல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான முக்கிய அறிவிப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு: மதிப்பெண் பட்டியல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான முக்கிய அறிவிப்பு!


UPDATED : மே 08, 2026 07:08 PM

ADDED : மே 08, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 07:08 PM ADDED : மே 08, 2026 07:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம், மார்ச் 2026ல் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பது குறித்த அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலமாக வரும் மே 13, 2026 அன்று காலை 11:00 மணி முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், தனித்தேர்வர்கள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரியில் தங்களது பிறந்த தேதி மற்றும் தேர்வுப் பதிவெண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே நேரடியாக மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், தேர்வு முடிவுகளில் திருப்தியில்லாத அல்லது தங்கள் விடைத்தாள்களை ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மே 12, 2026 காலை 11:00 மணி முதல் மே 16, 2026 மாலை 05:00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இதையடுத்து, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் மற்றும் பிளஸ் 1 அரியர் பாடங்களை எழுதியவர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் வழியாகவும் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் ஒன்றிற்கு கட்டணமாக ரூ.275 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை விண்ணப்பிக்கும் இடத்திலேயே ரொக்கமாகச் செலுத்த வேண்டும்.

மேலும், விடைத்தாள் நகலைப் பெற்றுக் கொள்ளும் தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் தகுதி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலினை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய தேதி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். அதே போல், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவும், விடைத்தாள் நகல் விநியோகத்திற்குப் பிறகு தனியாக அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us