பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு நான் முதல்வன், கல்லுாரி கனவு முகாம்
பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு நான் முதல்வன், கல்லுாரி கனவு முகாம்
UPDATED : மே 17, 2024 12:00 AM
ADDED : மே 17, 2024 08:08 AM
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில், பிளஸ் 2 படித்து முடித்த மாணவ, மாணவியர்களுக்கு, நான் முதல்வன் திட்டத்தில், உயர்கல்விக்கு வழிகாட்டும், கல்லுாரி கனவு நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் உமா தலைமையில், நடந்தது.
அதில், உயர்கல்வி பயின்ற பின் அரசு வேலைக்கு காத்திருக்காமல், அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்தி சுய தொழில் தொடங்கி, தொழில் முனைவோர்களாக முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்புகளை படித்த இளைஞர்களுக்கு உருவாக்க இயலும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், உயர்கல்விக்கான வாய்ப்புகள் உள்ள பாடப்பிரிவு வாரியான பட்ட படிப்பு, பட்டய படிப்பு மற்றும் கல்லுாரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்பு போன்ற விபரங்கள், புகழ்பெற்ற வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, அரசு கல்வி நிறுவனங்கள், அரசுத்துறைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்ட உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அரங்குகளை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்டி புத்தகத்தை வழங்கினார்.