sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வில் மடிப்பாக்கம், நங்கநல்லுார் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி சாதனை

பிளஸ் 2 தேர்வில் மடிப்பாக்கம், நங்கநல்லுார் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி சாதனை

பிளஸ் 2 தேர்வில் மடிப்பாக்கம், நங்கநல்லுார் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி சாதனை


UPDATED : மே 09, 2026 10:46 AM

ADDED : மே 09, 2026 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 10:46 AM ADDED : மே 09, 2026 10:48 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை, மடிப்பாக்கம் மற்றும் நங்கநல்லுார் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர், பிளஸ் 2 தேர்வில் இந்தாண்டும், முதல் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சென்னை, மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இந்த ஆண்டு பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய, 145 மாணவ மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவி திவ்யஸ்ரீ மூன்று பாடங்களில், 100 மதிப்பெண்களுடன், 595 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். தர்ஷினி இரு பாடங்களில், 100 மதிப்பெண்ணுடன், 590 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், லக் ஷனா ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்ணுடன், 586 மதிப்பெண் பெற்று முன்றாம் இடம் பிடித்தார்.

கணினி அறிவியலில், 20 பேர், கணக்கியலில், 6 பேர், பொருளியல் மற்றும் வணிகக் கணிதத்தில், 3 பேர், வேதியியல் மற்றும் வணிகவியல் பாடத்தில் தலா ஒருவர் என, 34 பேர், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நங்கநல்லுார் பிரின்ஸ் பள்ளி

நங்கநல்லுாரில் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய, 81 மாணவ, மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவி பானு சந்தியா இரண்டு பாடங்களில் 100 மதிப்பெண்களுடன், 595 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவர் கிரிஷ், 590 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், ஹர்ஷினி ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்ணுடன், 584 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

தேர்வு எழுதிய, 81 பேரில் கணக்குப்பதிவியலில், 7 பேர், கணினி அறிவியல் மற்றும் வணிகக் கணிதத்தில் தலா, 2 பேர், பொருளியல் மற்றும் வணிகவியலில் தலா ஒருவர் என, 13 மாணவ, மாணவியர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பிரின்ஸ் கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் வாசுதேவன், துணைத் தலைவர்கள் விஷ்ணு கார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ், செயலாளர் ரஞ்சனி, பள்ளி முதல்வர்கள் பத்மா, சாமுண்டீஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளை கூறி ஊக்கப்படுத்தினர்.

மேலும், சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பிரின்ஸ் கல்வி குழுமத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் வாசுதேவன் தெரிவித்தார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us