sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2வில் மாநில அளவில் இரண்டாமிடம்திருப்பூர் விகாஸ் வித்யாலயா பள்ளி சாதனை

பிளஸ் 2வில் மாநில அளவில் இரண்டாமிடம்திருப்பூர் விகாஸ் வித்யாலயா பள்ளி சாதனை

பிளஸ் 2வில் மாநில அளவில் இரண்டாமிடம்திருப்பூர் விகாஸ் வித்யாலயா பள்ளி சாதனை


UPDATED : மே 10, 2026 07:40 PM

ADDED : மே 10, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 07:40 PM ADDED : மே 10, 2026 07:42 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர், கூலிபாளையத்தில் அமைந்துள்ள விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகத்தான சாதனை படைத்துள்ளது. தேர்வெழுதிய, 254 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பதிவு செய்துள்ளது.

இப்பள்ளி மாணவர், மகேஸ்வர், 600க்கு 597 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் இரண்டாமிடம், பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இம்மாணவர் பொறியியல் தரவரிசையில், 200க்கு 200 'கட் ஆப்' மதிப்பெண் பெற்றுள்ளார்.

மாணவி சுமேகா 594, மதிப்பெண் பெற்று இரண்டாமிடம். பவித்ரா, அருளொளி மற்றும் குக சரவணன் ஆகியோர், தலா, 593 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்டனர். சிவபாலன், 592 மதிப்பெண் பெற்று நான்கமிடம்; கோபிகா மற்றும் தரணி ஸ்ரீ ஆகியோர், 587 மதிப்பெண் பெற்று ஐந்தாமிடம் பிடித்தனர்.

கணினி அறிவியலில், 25 பேர்; கணக்குப்பதிவியல், வேதியியலில், தலா, 3 பேர்; இயற்பியல், கணிதம், வணிகவியல், வணிகக் கணிதம் மற்றும் பொருளியலில், தலா 2 பேர்; கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும் பிரெஞ்ச் பாடத்தில், தலா ஒருவர் என, பல்வேறு பாடங்களில் 43 மாணவ, மாணவியர், 100 மதிப்பெண் (சென்டம்) பெற்றனர். கூடுதலாக, தமிழில் 7 மாணவர்கள், ஆங்கிலத்தில், 7 மாணவர்கள், 99 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

'கடந்த 37 ஆண்டுகளாக மருத்துவர், பொறியாளர் மற்றும் தணிக்கையாளர்களை உருவாக்கி வரும் இப்பள்ளி, ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளுக்குச் சிறந்த பள்ளியாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும், மாநில மற்றும் மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்றும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றும், மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக விளங்குகிறது,' என, பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.

சாதித்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் மற்றும் பள்ளி முதல்வர் அனிதா ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us