பிளஸ் 2 சான்றிதழில் மாறிய ஆண்டு: திரும்ப பெற்ற பள்ளி நிர்வாகம்
பிளஸ் 2 சான்றிதழில் மாறிய ஆண்டு: திரும்ப பெற்ற பள்ளி நிர்வாகம்
UPDATED : மே 15, 2026 04:33 PM
ADDED : மே 15, 2026 04:34 PM
திண்டுக்கல்:
திண்டுக்கல் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பிளஸ் 2 பொது தேர்வு தற்காலிக சான்றிதழ்களில் 2025 - 2026க்கு 2022 - 2026 என தவறுதலாக குறிப்பிட்டிருந்ததால் சான்றிதழகளை பள்ளி நிர்வாகம் அவசரமாக திரும்ப பெற்றுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு மே 8ல் வெளியான நிலையில் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது . திண்டுக்கல் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக சான்றிதழ்கள் வழங்கப்பட்டதில் கல்வி ஆண்டு 2025 - 2026க்கு பதில் 2022 - 2026 என தவறாக குறிப்பிடப்பட்டது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சான்றிதழ்களை திரும்ப பெற்றுள்ளது. சான்றிதழ் தவறை சீரமைத்த பின் வழங்குவதாக பள்ளி நிர்வாகம் கூறி உள்ளது.
முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கருணாநிதி கூறுகையில், “ஆன்லைன் முனையத்தில் இந்த தவறு நடந்திருக்கலாம். விரைவில் அனைத்து மாணவிகளுக்கு தற்காலிக சான்றிதழ்கள் வழங்கப்படும்” என்றார்.
