தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க நோடல் மையங்கள் அறிவிப்பு

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க நோடல் மையங்கள் அறிவிப்பு

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க நோடல் மையங்கள் அறிவிப்பு


UPDATED : ஆக 06, 2014 12:00 AM

ADDED : ஆக 06, 2014 03:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2014 12:00 AM ADDED : ஆக 06, 2014 03:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: பிளஸ் 2 தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான நோடல் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும் பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, தகுதியான நபர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: பள்ளிகள் மூலம் தேர்வெழுதி தேர்ச்சியடையாத மாணவர்களும் (எச் வகை) இந்த முறையில் விண்ணப்பிக்கலாம். நேரடி தனித்தேர்வர்களாகவும் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். நேரடி தனித்தேர்வர்கள் வரும், செப்டம்பர் 1ம் தேதி பதினாறரை ஆண்டுகள், வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.

ஆன்-லைனில் விண்ணப்பிக்க கல்வி மாவட்ட வாரியாக, நோடல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களுக்கு நேரில் சென்று தேர்வர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். நோடல் மையங்களில் வரும் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங் களுக்கு www.tndge.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரம் கல்வி மாவட்டம்

பி.சீனுவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் - பெண்
ஸ்ரீ நாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் - ஆண்
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதுார் - இருபாலரும்
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உத்திரமேரூர் - இருபாலரும்

செங்கல்பட்டு கல்வி மாவட்டம்

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அழகேசன் நகர், செங்கல்பட்டு - பெண்
சி.எஸ்.ஐ. செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு - ஆண்
வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, ஜி.எஸ்.டி.ரோடு, தாம்பரம் - இருபாலரும்
அரசு மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம் - இருபாலரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us