தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வு அறையில் மொபைல் போன் பறிமுதல்

பிளஸ் 2 தேர்வு அறையில் மொபைல் போன் பறிமுதல்

பிளஸ் 2 தேர்வு அறையில் மொபைல் போன் பறிமுதல்


UPDATED : மார் 15, 2016 12:00 AM

ADDED : மார் 15, 2016 11:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2016 12:00 AM ADDED : மார் 15, 2016 11:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்
: பிளஸ்
2 தேர்வில், நேற்று வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடத்திற்கான தேர்வுகள் நடந்தன. 

திண்டுக்கல், மேற்கு ரத வீதியில் உள்ள பள்ளியில், பறக்கும் படை குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், 15 மாணவர்களிடம் மொபைல் போன்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் தேர்வில் மொபைல் போன்களை எந்த மாணவரும் பயன்படுத்தவில்லை. மொபைல் போன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், தேர்வு அறைக்குள் மொபைல் போன்களை எவ்வாறு கொண்டு சென்றீர்கள்என விசாரித்தனர். அதற்கு மாணவர்கள் மொபைல் போன்களை அணைத்து விட்டு தேர்வு அறைக்குள் எடுத்து சென்றதாக கூறியுள்ளனர். 

இதையடுத்து அறை கண்காணிப்பாளர்கள், தேர்வு மையத்தின் மேற்பார்வையாளரிடம்அதிகாரிகள் விசாரணை செய்தனர். பின் பறிமுதல் செய்த மொபைல் போன்களை மாணவர்களிடம் ஒப்படைத்து எச்சரித்து அனுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us