தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்கூட்டர்; அசாம் அரசு அதிரடி

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்கூட்டர்; அசாம் அரசு அதிரடி

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்கூட்டர்; அசாம் அரசு அதிரடி


UPDATED : நவ 03, 2023 12:00 AM

ADDED : நவ 03, 2023 11:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2023 12:00 AM ADDED : நவ 03, 2023 11:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குவஹாத்தி: அசாமில், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, 35,775 மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசாக வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.வட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, டாக்டர் பனிகந்தா காகதி விருது திட்டத்தின் கீழ், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசாக வழங்க முடிவு செய்யப்பட்டது.இதற்கு மாநில அமைச்சரவை குழு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, பிளஸ் 2 தேர்வில் 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 5,566 மாணவர்களுக்கும், 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற 30,209 மாணவியருக்கும் ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட உள்ளன.இதற்கான விழா, வரும் 30ம் தேதி நடக்க உள்ளது. அதேபோல், 10ம் வகுப்பில் 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற, 27,183 மாணவர்களுக்கு வரும் 29ம் தேதி தலா 15,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us