UPDATED : மே 07, 2011 12:00 AM
ADDED : மே 07, 2011 11:36 AM
அ நிறம் | அளவு
சென்னை: பிளஸ் 2 உடனடி தேர்வுகள், ஜூன் 22ல் துவங்கி, ஜூலை 2 வரை நடக்கின்றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், 9ம் தேதி காலை வெளியிடப்படுகிறது. இத்தேர்வில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடையும் மாணவர்கள், ஒரு கல்வியாண்டை வீணாக்காமல், உடனடியாக மீண்டும் தேர்வெழுதி பயனடையலாம். இத்தேர்வுகள், ஜூன் 22 ல் துவங்கி, ஜூலை 2 வரை நடைபெறுகிறது.
கடந்தாண்டு, மூன்று பாடங்கள் வரை 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்தனர். இந்தாண்டு, இதைவிட சற்று குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 11 முதல் வழங்கப்படுகின்றன.
