தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2, இளநிலை பட்டப்படிப்பில் பொறியியல் கல்வி

பிளஸ் 2, இளநிலை பட்டப்படிப்பில் பொறியியல் கல்வி

பிளஸ் 2, இளநிலை பட்டப்படிப்பில் பொறியியல் கல்வி


UPDATED : ஆக 05, 2011 12:00 AM

ADDED : ஆக 05, 2011 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2011 12:00 AM ADDED : ஆக 05, 2011 04:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழிற்கல்வி பொறியியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு விரைவில் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கபில் சிபல் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், உயர்மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 அல்லது தொழிற்கல்வி பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இந்த பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்படும். மேலும், உயர் கல்வியில் பி.எஸ்சி., தொழிற்கல்வி பொறியியல் படிப்பும் இந்த ஆண்டு அல்லது வரும் கல்யாண்டிலேயே அறிமுகப்படுத்தப்படும்.

பள்ளிக் கல்வி முறையிலேயே தொழிற்கல்வியை கொண்டு வர திட்டமிட்டு அதற்கான பாடப்பிரிவுகளை தயாரிக்க முயற்சித்து வருகிறோம் என்றார்.

பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் ஏராளமான பொறியியல் கல்லூரிகளின் உருவாகிவிட்டன. ஆனால், தரமான கல்வியை அளிப்பதில்லை. தங்களது பொறியியல் சேர்க்கை இடங்கள் நிரம்பினால் போதும் என்று 35 விழுக்காடு மதிப்பெண் எடுத்த மாணவரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். இவர் பொறியியல் படித்து நல்ல பொறியாளராக எப்படி வெளிவருவார் என்று சிந்திப்பதில்லை.

கர்நாடகாவில் 2007ம் ஆண்டு 37 விழுக்காடு பொறியாளர்கள் மட்டுமே வேலை வாய்ப்பு பெற்றனர். இதே நிலைதான் ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் நிலவுகிறது. இதற்குக் காரணமே காளான்களைப் போல பொறியியல் கல்லூரிகள் முளைத்திருப்பதுதான் என்றார்.

எனவே, பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, தரத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பொறியியல் பாடப்பிரிவுகளையும், பாடங்களையும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us