தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செப்., 2ம் தேதி மருத்துவக் கலந்தாய்வு துவக்கம்

செப்., 2ம் தேதி மருத்துவக் கலந்தாய்வு துவக்கம்

செப்., 2ம் தேதி மருத்துவக் கலந்தாய்வு துவக்கம்


UPDATED : ஆக 24, 2011 12:00 AM

ADDED : ஆக 24, 2011 03:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2011 12:00 AM ADDED : ஆக 24, 2011 03:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 30க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்களும், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 6 பிடிஎஸ் காலியிடங்களும் இந்த கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளது.

செப்டம்பர் 2ம் தேதி, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று சுயநிதி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்த மாணவர்கள், வேறு கல்லூரியில் மாறுவதற்கு மறு ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறுகிறது.

செப்டம்பர்  3ம்தேதி சுயநிதி எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், அரசு பிடிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

செப்டம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு இல்லை.

5ம் தேதி முதல் 12ம் தேதி வரை சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 726 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று எம்.பி.பி.எஸ். சேர்க்கை பெற்ற மாணவர்களில் சுமார் 30 பேர் உரிய கல்லூரிகளில் சேராததால் ஏற்பட்ட காலியிடங்களும், இதேப்போல அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட 6 பி.டி.எஸ். காலியிடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 726 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இந்த 3ம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஜுலை மாதம் 28ம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி முடிவடைந்த இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு வந்தும், இடம் கிடைக்காமல் 466 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அரசு பிடிஎஸ் படிப்பிற்கான காத்திருப்போர் பட்டியலில் 202 மாணவர்கள் உள்ளன.

காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ரேங்க் அடிப்படையில் கலந்தாய்விற்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 762 இடங்களில் மாணவர்களை சேர்க்க சுமார் 9,700 பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட உள்ளனர்.

செப்டம்பர் 2ம் தேதி வேறு சுயநிதி மருத்துவக் கல்லூரியில் மறு ஒதுக்கீடு கோரி கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், மாணவர்கள் தாங்கள் முன்பு சேர்க்கை பெற்ற சுயநிதி மருத்துவக் கல்லூரியின் சேர்க்கை  ஸ்லிப், போனபைடு சான்றிதழ் ஆகியவற்றை வாங்கி வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us