பிளஸ் 2 துணைத் தேர்வெழுதியோருக்கான மதிப்பெண் சான்றிதழ்
பிளஸ் 2 துணைத் தேர்வெழுதியோருக்கான மதிப்பெண் சான்றிதழ்
UPDATED : அக் 27, 2014 12:00 AM
ADDED : அக் 27, 2014 10:37 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கூறியதாவது: மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபரில் பிளஸ் 2 துணை தேர்வெழுதியோருக்கு மதிப்பெண் சான்றிதழ் ராமநாதபுரம் புனித ஆந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி ஆரியவைசிய மேல்நிலைப் பள்ளிகளில் இன்று மாலை வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் அக்.,29 வரை அரசு சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, புனித ஆந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி ஆயிர வைசியா மேல்நிலைப்பள்ளி, கே.ஜே.எம்., மேல்நிலைப்பள்ளி, திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆகிய சேவை மையங்களில் மறு மதிப்பெண் கூட்டலுக்கு உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம், என்றார்.

