UPDATED : ஏப் 08, 2011 12:00 AM
ADDED : ஏப் 08, 2011 11:02 AM
பிளஸ் 2 மாணவியருக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம், திருவள்ளூர் அடுத்த திருமுருகன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் துவங்கி உள்ளது.
இதில், மாணவியருக்கு ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையத்தில், திருமுருகன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி செயல்படுகிறது.
இக்கல்லூரியில், கோடை கால பயிற்சி வகுப்புக்கள் துவங்கி உள்ளது. பிளஸ் 2 கல்வி பயிலும் மாணவியருக்காக, இலவசமாக நடத்தப்படும் இதில், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. கணினி அடிப்படை கல்வியும் வழங்கப்படுகிறது.
மேலும், பயிற்சி வகுப்புக்காக கல்லூரிக்கு வந்து செல்ல விரும்பும் மாணவியருக்கு இலவச பஸ் வசதியையும் கல்லூரி நிர்வாகம் வழங்கி வருகிறது. இப்பஸ்கள் மேல்நல்லாத்தூர், மணவாள நகர், திருவள்ளூர் பஸ் நிலையம், திருத்தணி, கனகம்மா சத்திரம், திருவாலங்காடு, கீழச்சேரி, பேரம்பாக்கம், கடம்பத்தூர், ஊத்துக்கோட்டை, பென்னலூர்பேட்டை, பூண்டி, வெள்ளியூர், ஈக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவியர் உடனடியாக கல்லூரி நிர்வாகத்தை நேரில் சந்தித்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
