UPDATED : ஜூலை 01, 2009 12:00 AM
ADDED : ஜூலை 01, 2009 05:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிளஸ் 2 உடனடி மறுத்தேர்வு ஜூலை 2ம் தேதியுடன் நிறைவடைகிறது. இம்மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கடந்த ஜூன் 22ம் தேதி முதல் உடனடி சிறப்பு தேர்வு நடந்து வருகிறது. உடனடியாக விடைத்தாள் திருத்தும் பணி துவங்க உள்ளது.
ஜூலை இரண்டாம் வாரத்திற்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முழுயைõக முடிக்கவும், அதன்பின், சென்னையிலுள்ள டேட்டா சென்ட்ரலில் மதிப்பெண் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.