தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வில் மாற்றம் இருக்குமா?

பிளஸ் 2 தேர்வில் மாற்றம் இருக்குமா?

பிளஸ் 2 தேர்வில் மாற்றம் இருக்குமா?


UPDATED : டிச 16, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
“பள்ளி பொதுத்தேர்வுகளுக்கான தற்காலிக அட்டவணை இம்மாத இறுதியில் தயாராகிவிடும்,” என்று தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது வரை பெறப்பட்ட தகவல்படி, ஐந்து லட்சத்து 99 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர். 10ம் வகுப்பு மாணவர்கள் குறித்த விவரம் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
தேர்வுக்காக தற்காலிக அட்டவணை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் அட்டவணை தயாராகிவிடும். தேர்வு துவங்கும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்வுகளுக்கு போதிய இடைவெளி கிடைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அட்டவணை தயாரிக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் இருக்கும்.
கேள்வித்தாள் கட்டுகளை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்ப உரிய இடங்கள் தேர்வு செய்யப்படும். வினாத்தாள் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படும். கடந்த காலங்களில் ஏற்பட்ட சில அனுபவங்களின் அடிப்படையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விடைத்தாள்களை சரியான முறையில் மதிப்பீடு செய்து, அதற்குரிய மதிப்பெண்களை வழங்குமாறு ஆசிரியர்களை கேட்டுக்கொள்வோம். தேர்வில் எவ்வித முறைகேடுகளும் நடக்காத அளவுக்கு கடுமையான கண்காணிப்பு இருக்கும். மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதன்மூலம், பெரிய அளவில் எந்தவித குறையும் இல்லாமல் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன என்பது தெளிவாகிறது.
லோக்சபா தேர்தல் காரணமாக தேர்வுகள் நடத்துவதில் மாற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. டேட்டா சென்டரில் தற்காலிக பணியாளர்களால், மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவு செய்யும் விவகாரத்தில் எவ்வித பிரச்னையும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. ‘டம்மி’ பதிவெண்களுக்குத் தான் அவர்கள் மதிப்பெண்கள் பதிவு செய்வர்.
அவர்களுக்கு ஒரிஜினல் பதிவெண்கள் தெரியாது. மேலும், அவர்கள் சரியான முறையில் மதிப்பெண்களை பதிவு செய்துள்ளார்களா என்பது மீண்டும் ஒரு முறை சரிபார்க்கப்படுகிறது. எனவே, இதில் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. இவ்வாறு வசந்தி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us