UPDATED : ஜன 12, 2016 12:00 AM
ADDED : ஜன 12, 2016 10:26 AM
தர்மபுரி
:
தர்மபுரி, பென்னாகரம் சாலையில் உள்ள, ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் பள்ளியில், பொது தேர்வை எதிர்கொள்வது குறித்து, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான ஊக்குவித்தல் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்று, மாணவர்கள் கல்வியுடன், பொது அறிவையும் வளர்த்துக் கொண்டு, தங்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பல்வேறு வழிமுறைகளை எடுத்துக் கூறினார். இன்றைய சூழ்நிலையில் சவால்களை எதிர் கொண்டு, அதில் வெற்றி பெறுவது குறித்தும், இது போன்று பல வெற்றிகளை பெற்ற பல்துறை வல்லுனர்கள், சாதனையாளர்களின் வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்.
மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்வை அச்சம் இன்றி எழுதி, மாநில அளவில் சாதனை படைக்க வாழ்த்து தெரிவித்தார். பள்ளி தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர் பிரேம், முதல்வர் ராஜேஸ்வரி, கல்வி இயக்குனர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி பள்ளி முதல்வர் விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
