UPDATED : மே 18, 2016 12:00 AM
ADDED : மே 18, 2016 11:49 AM
மதுரை
: மதுரை
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டை
விட 0.32 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல்
மூன்று இடங்களை மாணவிகளே கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
மாவட்டத்தில் 286 பள்ளிகளை சேர்ந்த 37,437 பேர் தேர்வு
எழுதியதில், 34,887 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன்
தேர்ச்சி விகிதம் 93.19 சதவீதம். இதில், மாணவிகள் தேர்ச்சி 95.82 சதவீதம்.
மாணவர்கள் தேர்ச்சி 90.36 சதவீதம். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி
விகிதம் கடந்தாண்டை (92.87) விட 0.32 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேநேரம்,
ஆறு அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி
பெற்றிருந்தாலும் அதன் மொத்த தேர்ச்சி விகிதம் 86.81 சதவீதத்தில் இருந்து 86.58 சதவீதமாக சற்றே
குறைந்துள்ளது. ஆனால், பாடங்கள் வாரியாக மாணவர்கள் பெற்ற &'சென்டம்&' எண்ணிக்கை கடந்தாண்டை (597) விட இந்தாண்டு (715) அதிகரித்துள்ளது.
உற்சாகத்தில்
மாணவிகள்:
மாவட்ட அளவில்
ரேங்க் பெற்ற மாணவிகள் விவரம்:
வேலம்மாள்
மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீபிரியா 1190 மதிப்பெண்
பெற்று முதலிடம் பெற்றார். இவர், தமிழ்- 195, ஆங்கிலம் 196, வணிகவியல் - 199 பொருளியல், கணக்கு பதிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் தலா 200 மதிப்பெண் பெற்றார்.
அவர் கூறுகையில்,
பள்ளியில் ஆசிரியர்கள் அடிக்கடி தேர்வு எழுத
வைத்தனர். வீட்டிலும் படிக்கும் சூழ்நிலையை என் அம்மா உருவாக்கி கொடுத்ததால்
சாதிக்க முடிந்தது, என்றார்.
செயின்ட் ஜான்ஸ்
மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீநிதி கார்த்திகா 1189 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தை பிடித்தார். தமிழ்- 195,
ஆங்கிலம்- 194 மற்றும் பிற நான்கு பாடங்களில் தலா 200 மதிப்பெண் பெற்றார். இவர், மாவட்ட ரேங்க் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் தினமும் நான்கு
மணிநேரம் படித்தேன். அதனால் மாவட்ட அளவில் சாதிக்க முடிந்தது, என்றார்.
செயின்ட் ஜோசப்
பெண்கள் மெட்ரிக் பள்ளி மாணவி நாகநந்தினி 1187 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றார். இவர், தமிழ்- 195, ஆங்கிலம்- 192 பிற பாடங்களில் தலா 200 மதிப்பெண்
பெற்றார். இவர் கூறுகையில், ஆசிரியர்கள் தினமும் நடத்தும் பாடங்களை
வீட்டில் தினமும் படித்தேன். மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்தேன்.
அடிக்கடி பள்ளியில் தேர்வு நடத்தப்பட்டதால் ரேங்க் பெற முடிந்தது, என்றார். சாதனை மாணவிகளை கலெக்டர் வீரராகவராவ், தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் பாராட்டினர்.
