தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பம்

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பம்

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பம்


UPDATED : நவ 10, 2009 12:00 AM

ADDED : நவ 10, 2009 11:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2009 12:00 AM ADDED : நவ 10, 2009 11:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2 தேர்வை ஏற்கனவே எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், சம்பந்தப்பட்ட பாடங்களை மீண்டும் எழுத, ‘எச்’ வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, வரும் ஏப்ரல் முதல் தேதியில் 16 வயது ஆறு மாதங்களை பூர்த்தி செய்யும் மாணவர்கள், ‘எச்பி’ வகை விண்ணப்பங்களை பயன்படுத்த வேண்டும்.


சி.இ.ஓ., டி.இ.ஓ., அலுவலகங்கள் மற்றும் தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், நாளை முதல் 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ‘எச்’ வகை தேர்வர்கள், ஒரு பாடத்திற்கு 50 ரூபாய் வீதமும், இதரக் கட்டணமாக 35 ரூபாயும் செலுத்த வேண்டும். ‘எச்பி’ வகை தேர்வர்கள், தேர்வுக் கட்டணமாக, 150 ரூபாய், இதர கட்டணங்களாக 37 ரூபாய் செலுத்த வேண்டும்.


சென்னை மாவட்ட தேர்வர்கள், ‘அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை-6’ என்ற பெயரில் ‘டிடி’ எடுக்க வேண்டும். இதர மாவட்ட தேர்வர்கள், கருவூலச்சீட்டு மூலமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யும் விண்ணப்பங்களை, 25ம் தேதிக்குள் சம்பந்தபட்ட மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த மாணவர்கள்,  கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ ஒப்படைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us