தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 மதிப்பெண் விபரம் வெளியீடு

பிளஸ் 2 மதிப்பெண் விபரம் வெளியீடு

பிளஸ் 2 மதிப்பெண் விபரம் வெளியீடு


UPDATED : ஜூலை 19, 2021 12:00 AM

ADDED : ஜூலை 19, 2021 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2021 12:00 AM ADDED : ஜூலை 19, 2021 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனா பரவல் பிரச்னையால், தமிழக பள்ளி கல்வி திட்டத்தில் படித்த, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு இன்றி மதிப்பெண் வழங்குவது குறித்த, வழிகாட்டு முறையை முடிவு செய்ய, மதிப்பெண் நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, மதிப்பெண் வழங்கும் முறை முடிவானது. 
பிளஸ் 2 செய்முறை தேர்வின், 30 மதிப்பெண்; பிளஸ் 1 பொது தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணில், 20 சதவீதம் மற்றும், 10ம் வகுப்பில் அதிகபட்சம் மதிப்பெண் பெற்ற, மூன்று பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில், 50 சதவீதம் சேர்த்து, பிளஸ் 2 மதிப்பெண்ணாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிளஸ் 2 மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் விபரம், இன்று அரசு தேர்வு துறையால் வெளியிடப்பட்டது. பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், அரசு தேர்வு துறை அலுவலகத்தில், காலை, 11 மணியளவில் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார். 
தொடர்ந்து அவர், ‘600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எவருமில்லை. கொரோனா சூழலை பொறுத்து தனித்தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். 10ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து தமிழக முதல்வருடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும். பள்ளிகள் திறக்கப்படாத இன்றைய சூழலில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.
தேர்வு துறை இணையதளமான www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் ஒவ்வொரு மாணவரும் தங்களின் மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். 
மதிப்பெண் பட்டியலை, வரும், 22ம் தேதி பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாணவர்களின் கைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us