UPDATED : மார் 15, 2016 12:00 AM
ADDED : மார் 15, 2016 10:59 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை
மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல்
தேர்வுகளில் 373 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை.
வேதியியல்
தேர்வை 23,483 மாணவர்களும், கணக்கு பதிவியல் தேர்வை 10,367 மாணவர்களும் எழுதினர். இப்பாடங்களில் தலா 120 மற்றும் 253 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இணை இயக்குனர் கண்காணிப்பு: இம்மாவட்டத்திற்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட இணை இயக்குனர் சசிகலா நேற்று மதுரை வந்தார். நிர்மலா, ஓ.சி.பி.எம்., உட்பட நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் நடந்த தேர்வை கண்காணித்தார். முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உடன் சென்றார்.
