தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு: தேர்வுத்துறை சுறுசுறுப்பு!

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு: தேர்வுத்துறை சுறுசுறுப்பு!

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு: தேர்வுத்துறை சுறுசுறுப்பு!


UPDATED : ஜன 19, 2010 12:00 AM

ADDED : ஜன 19, 2010 01:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2010 12:00 AM ADDED : ஜன 19, 2010 01:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பதிவெண்கள் பட்டியல், ஓரிரு நாளில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதும், செய்முறை தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் மார்ச் 1ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 23ம் தேதியில் இருந்தும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வை நடத்துவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

முதற்கட்டமாக, மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் மற்றும் பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 செய்முறைத் தேர்வில், மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பர் எனத் தெரிகிறது. வழக்கமாக, பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். இதற்கான அட்டவணை, ஜனவரி மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும். சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், செய்முறைத் தேர்வை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப் பட்டுள்ளன.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் இரண்டு முதல் அதிகபட்சமாக நான்கு கட்டங்களாக தனித்தனியே செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். செய்முறைத் தேர்வுக்கான வினாத்தாள்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்படும். பிளஸ் 2 மாணவர்களுக்கு பாட வாரியாக தலா 50 மதிப்பெண்களுக்கும், மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் மாணவர்களுக்கு 100 மதிப்பெண்களுக்கும் செய்முறை தேர்வு நடைபெறும். இந்த தேர்வை, சென்னையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். இவர்களுக்கான வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பதிவெண்கள் பட்டியல், இன்னும் முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்படவில்லை.


இறுதிக் கட்ட ஆய்வுக்குப் பின், மாணவர்களுக்குரிய பதிவெண்களை ஒதுக்கீடு செய்து, அந்தப் பட்டியலை முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் வழங்க தேர்வுத்துறை முடிவு செய்து உள்ளது. இந்தப் பட்டியல், ஓரிரு நாளில் வழங்கப்படும் என்றும், அதன் பின், அனைத்து மாவட்டங் களிலும் செய்முறைத் தேர்வு அட்டவணையை முதன்மைக் கல்வி அதிகாரிகள் வெளியிடுவர் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us