UPDATED : செப் 26, 2011 12:00 AM
ADDED : செப் 26, 2011 02:39 PM
பொறியியல் வடிவமைப்புப் போட்டியான 2011 டிசைன் ஏசிஇ-யில் வெற்றி பெற்ற மாணவர்களை பேரி வெமில்லர் இன்டர்நேஷனல் ரிசர்ச் நிறுவனம் தேர்வு செய்து அறிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களிடம் இருக்கும் திறமையை கண்டறிந்து அதனை ஊக்குவிக்கும் வகையில் பேரி வெமில்லர் இன்டர்நேஷனல் ரிசோர்ஸ் நிறுவனம் புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள் போட்டியை நடத்துகிறது. தென்மாநிலங்களைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கிடையே நடைபெறும் இப்போட்டியில் 200க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் இருந்து இறுதிப்போட்டிக்கு 10 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டது. இவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ரியல் டயம் பொறியியல் பிரச்சினைக்கான சரியான தீர்வுகளை வழங்கினர். ஒவ்வொரு தீர்வும் நன்கு ஆராயப்பட்டு முதல் 3 பரிசினை பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் பரிசினை ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி மாணவர்கள் சுதீஷ்
முதல் பரிசாக ரூ.30,000மும், 2ம் பரிசாக ரூ.25,000மும், 3ம் பரிசாக ரூ.20,000மும் வழங்கப்பட்டது. இத்துடன் டபிள்யுஐஆர் இந்தியா நிறுவனத்தில் உள்ளிருப்பு பயிற்சி பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
