தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜிப்மேட் 2026 நுழைவுத் தேர்வு அறிவிப்பு

ஜிப்மேட் 2026 நுழைவுத் தேர்வு அறிவிப்பு

ஜிப்மேட் 2026 நுழைவுத் தேர்வு அறிவிப்பு


UPDATED : மே 05, 2026 10:03 AM

ADDED : மே 05, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2026 10:03 AM ADDED : மே 05, 2026 10:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய மேலாண்மை நிறுவனங்களான போத் கயா மற்றும் ஜம்மு ஆகியவற்றில் வழங்கப்படும் ஐந்தாண்டு கால ஒருங்கிணைந்த மேலாண்மை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கூட்டு ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவுத் தேர்வு, ஜிப்மேட் 2026 குறித்த அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்விற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 16, 2026 அன்று தொடங்கியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் மே மாதம் 10ம் தேதி இரவு 11:50 மணி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த மே 11ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின், அதற்காக மே 12 முதல் மே 14 வரை கால அவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தேர்வு 2026 ஜூன் 7ம் தேதி அன்று கணினி வழித் தேர்வாக நடத்தப்படும். மொத்தம் 150 நிமிடங்கள் நடைபெறும் இத்தேர்வு, பிற்பகல் 03:00 மணி முதல் மாலை 05:30 மணி வரை நடைபெறும். தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் அமைந்திருக்கும். தேர்வு மையம், தேர்வு நடைபெறும் நகரம் மற்றும் அனுமதிச் சீட்டு குறித்த விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் https://exams.nta.nic.in/jipmat/ என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவத்தில் தங்களின் சொந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணை மட்டுமே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் அனைத்துத் தகவல்களும் அவற்றின் மூலமே அனுப்பப்படும்.

விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால், 011 - 40759000 அல்லது 011 - 69227700 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது jipmat@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us