UPDATED : நவ 17, 2023 12:00 AM
ADDED : நவ 17, 2023 10:00 AM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில், கல்லுாரி மாணவர்களுக்கான கல்விக்கடன் மேளா, வரும் 21ம் தேதி நடக்கிறது.இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், 7,500 கல்லுாரி மாணவர்களுக்கான கல்விக்கடன் விண்ணப்பங்களை, வித்யா லட்சுமி போர்டலில் பதிவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், காட்டங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்லைக்கழக கூட்ட அரங்கில், வரும் 21ம் தேதி, செவ்வாய்கிழமை நடக்கும் கல்விக்கடன் மேளாவில், அனைத்து வங்கிகளும் அரங்குகள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.இந்த மேளாவில், அனைத்து கல்லுாரி மாணவர்களும், உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
