தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜுன் 25க்குள் நாக் அந்தஸ்து பெறுவது கட்டாயம்: யு.ஜி.சி. துணைத் தலைவர்

ஜுன் 25க்குள் நாக் அந்தஸ்து பெறுவது கட்டாயம்: யு.ஜி.சி. துணைத் தலைவர்

ஜுன் 25க்குள் நாக் அந்தஸ்து பெறுவது கட்டாயம்: யு.ஜி.சி. துணைத் தலைவர்


UPDATED : ஜன 12, 2015 12:00 AM

ADDED : ஜன 12, 2015 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2015 12:00 AM ADDED : ஜன 12, 2015 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலுார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (வி.ஐ.டி.,), உலக மயமாக்கப்பட்ட உயர்கல்வி மற்றும் அதன் தர உறுதி குறித்த, இரண்டு நாள் சர்வதேச மாநாடு நடந்தது. அதன் நிறைவு விழாவில், பல்கலைக்கழக மானியக்குழுவின் துணத் தலைவர், எச்.தேவராஜ் கலந்து கொண்டார்.

விழாவில் அவர்பேசியதாவது: கல்வி நிறுவனங்கள் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெற வேண்டும் என்பதில், கடந்த, 60 ஆண்டுகளாக கவனம் செலுத்தப்பட்டு வந்தது. இப்போது, கல்வியின் தரத்தை மேம்படுத்து வதற்கு கவனம் செலுத்துவதை, பல்கலைக்கழக மானியக்குழு நோக்கமாக கொண்டிருக்கிறது.

எல்லா இடத்திலும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. எனவே, இதில் அந்தந்த இடத்துக்கு ஏற்ப, கல்வித்தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தியாக வேண்டும்.

இந்தியாவில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 19 சதவீதமாக உள்ளது. ஆனால், இது தமிழகத்தை பொறுத்தவரை, 48 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

நாடு முழுவதும் எல்லா கல்லுாரிகளும், பல்கலைக்கழகங்களும், வரும் ஜூன் 25ம் தேதிக்குள் நாக் எனப்படும் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் தர அந்தஸ்தைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us