UPDATED : பிப் 14, 2025 12:00 AM
ADDED : பிப் 14, 2025 10:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
கிண்டி பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களால் நடத்தப்படும் ஆற்றல் 25 நாளை அண்ணா பல்கலை விவேகானந்தா அரங்கத்தில் நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் விழிப்புணர்வையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆற்றல் என்ற நிகழ்வு நடத்தப்படுகிறது.
மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் வகுப்பு வாரியாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வுடன் விவேதா, ஜீனவ்ஸ் பிரைவேட் லிட் மற்றும் ஏமேக் ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.