தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரும் 27ல் குடிமைப்பணி தேர்வு 7,644 பேர் தேர்வெழுகின்றனர்

வரும் 27ல் குடிமைப்பணி தேர்வு 7,644 பேர் தேர்வெழுகின்றனர்

வரும் 27ல் குடிமைப்பணி தேர்வு 7,644 பேர் தேர்வெழுகின்றனர்


UPDATED : செப் 26, 2026 01:31 PM

ADDED : செப் 26, 2026 01:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2026 01:31 PM ADDED : செப் 26, 2026 01:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 1, முதல்நிலை தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல் குறித்து, மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், நடத்தப்படும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 1, முதல்நிலைத்தேர்வு நாளை செப்., (27ம் தேதி) நடக்கவுள்ளது. காலை 09:30 முதல் மதியம், 12:30 மணி வரை தேர்வு நடக்கும். இத்தேர்வை தர்மபுரி மாவட்டத்தில், 25 தேர்வு மையங்களில், 7,644 தேர்வர்கள் எழுதவுள்ளனர்.

தேர்வு மையத்தின் நுழைவு வாயில் காலை, 08:59 மணி வரை திறந்து வைக்கப்படும். தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையம் மற்றும் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை முன்கூட்டியே சரிபார்த்து, தேர்வன்று உரிய நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தேர்வர்கள் ஹால் டிக்கெட் மற்றும் அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டை ஆகியவற்றை கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும்.

தேர்வு தொடங்குவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன் நுழைவு வாயில் மூடப்படும். காலை, 09:00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மொபைல் போன், புளூடூத் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்களின் வசதிக்காக அனைத்து தேர்வு மையங்களிலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.





தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us