UPDATED : ஆக 11, 2023 12:00 AM
ADDED : ஆக 11, 2023 09:07 AM
அ நிறம் | அளவு
கோவை:
ஓணம் திருவிழாவுக்காக, கோவை மாவட்டத்தில், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு, 29ம் தேதி (செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு பதிலாக, செப்., 2ம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முழு பணி நாளாக செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறை நாள், செலவாணி முறிச்சட்டம் - 1881ன் கீழ் வராது என்பதால், உள்ளூர் விடுமுறை அறிவிக்கும்போது, மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு செயல்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
