UPDATED : பிப் 16, 2015 12:00 AM
ADDED : பிப் 16, 2015 11:41 AM
அ நிறம் | அளவு
மதுரை: இக்னோ கல்வி மையங்கள் மேலும் 3 மாவட்டங்களில் துவக்கப்பட்டு உள்ளன, என மதுரை மண்டல இயக்குனர் மோகனன் தெரிவித்தார்.
இம்மையத்தில் 15 மாவட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடந்தது.
மோகனன் கூறியதாவது: இக்னோ மண்டல மையத்தில் 400 பாடப்பிரிவுகளில் ஆண்டிற்கு 10 ஆயிரம் பேர் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு பேரிடர் மேலாண்மை, மின் வினியோக மேலாண்மை, கிளினிக்கல் கார்டியாலஜி ஆகியவற்றில் முதுநிலை டிப்ளமோ படிப்பு துவக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலைவாய்ப்புக்கான படிப்பும், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோருக்கான படிப்பும் துவக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் திருவாரூர், புதுக்கோட்டை, நீலகிரியில் மையங்கள் துவக்கப்பட்டுள்ளன, என்றார்.
