சந்திராயன் 3 க்கு லூனா 25 போட்டியா: மயில்சாமி அண்ணாதுரை பதில்
சந்திராயன் 3 க்கு லூனா 25 போட்டியா: மயில்சாமி அண்ணாதுரை பதில்
UPDATED : ஆக 11, 2023 12:00 AM
ADDED : ஆக 11, 2023 11:54 AM
இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வரும் ஆக.23ம் தேதி தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா -25 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.இது குறித்து இஸ்ரோ முன்னாள் செயற்கை கோள் மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியது, 2011ல் சீனாவுடன் இணைந்து ரஷ்யா செவ்வாய்க் கிரக பயணத்திட்டம் தோல்வியடைந்த பிறகு, லூனா25 திட்டப்பணியை கட்டமைத்துள்ளது. இந்தியா மங்கள்யான் திட்டத்தை மறு கட்டமைத்து, சந்திரயான் -2 திட்டத்தை வித்தியாசமாகத் தொடங்கிய பின்னர் சந்திராயன் 3 திட்டத்தை உருவாக்கியது.சந்திராயன் 3 சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. லூனா 25 சில மணிநேரங்களில் தரையிறங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ரஷ்யா லூனா 25 புதிய மிஷன் ஹார்டுவேர் ஆகும், அது இறுதிவரை வேலை செய்ய வேண்டும். சந்திராயன் 3 க்கு லுனா 25 போட்டியாக இருப்பதைப் பற்றி பேச வேண்டாம். இரண்டு பணிகளும் எதிர்கால சிறந்த மற்றும் பெரிய பணிகளுக்காக இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
