தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 30 நாட்கள் இலவச தையல் பயிற்சி பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

30 நாட்கள் இலவச தையல் பயிற்சி பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

30 நாட்கள் இலவச தையல் பயிற்சி பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : மே 15, 2026 04:36 PM

ADDED : மே 15, 2026 04:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2026 04:36 PM ADDED : மே 15, 2026 04:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
பெண்கள், 30 நாட்கள் இலவச தையல் கலைப்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து, இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:



கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

தற்போது பெண்களுக்கு, 30 நாட்கள் தையல் கலைப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு, 5ம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வயது வரை உள்ள பெண்கள் வரும், 20ம் தேதிக்குள், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம். பயிற்சியில், சீருடை, காலை, மதியம் உணவும், பயிற்சிக்கான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சி, காலை, 09:30 மணி முதல் மாலை, 05:30 மணி வரை நடக்கும். முடிவில் பயிற்சி சான்றிதழும், தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி. மேலும், 94422 47921; 90806 76557 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us