தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மீதி 35 சதவீத கல்வி கட்டணம் வசூலிக்க பள்ளிகளுக்கு ஐகோர்ட் அனுமதி

மீதி 35 சதவீத கல்வி கட்டணம் வசூலிக்க பள்ளிகளுக்கு ஐகோர்ட் அனுமதி

மீதி 35 சதவீத கல்வி கட்டணம் வசூலிக்க பள்ளிகளுக்கு ஐகோர்ட் அனுமதி


UPDATED : நவ 19, 2020 12:00 AM

ADDED : நவ 19, 2020 02:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2020 12:00 AM ADDED : நவ 19, 2020 02:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் கல்வி கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு 2020 ஏப்ரலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கல்வி நிறுவனங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன. மனுக்களை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். ஆகஸ்டில் 40 சதவீத கட்டணமும் வகுப்புகள் துவங்கிய பின் இரண்டு மாதங்களில் 35 சதவீத கட்டணமும் வசூலித்துக் கொள்ள நீதிபதி அனுமதி அளித்தார்.
நீதிமன்ற உத்தரவை மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார். பள்ளி கல்வித்துறை அறிக்கை அடிப்படையில் ஒன்பது பள்ளிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து பதில் அளிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள அனுமதிக்கும்படி பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கோரினர்.அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதா என அரசிடம் விளக்கம் பெறும்படி சிறப்பு பிளீடருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.&'பல பள்ளிகளில் 40 சதவீத கட்டணம் முழுமையாக வசூலிக்கப்படவில்லை; இருந்தாலும் அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது&' என தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை 2021 பிப்ரவரிக்குள் வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். இதை தவணை முறையில் வசூலிப்பது குறித்து பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
முழு கட்டணத்தை வசூலித்ததாக தனியார் பள்ளிகளுக்கு எதிரான புகார்கள் குறித்து கல்வித்துறை விசாரித்து நவ. 27ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் பள்ளி கல்வித்துறை செயலர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us