இன்று 'குரூப் - 2' தேர்வு 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்
இன்று 'குரூப் - 2' தேர்வு 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்
UPDATED : செப் 28, 2025 10:50 AM
ADDED : செப் 28, 2025 10:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இன்று நடத்தும், குரூப் 2, 2ஏ தேர்வுகளில், 5.53 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மூத்த உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறப்பு பிரிவு உதவியாளர், வனவர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட, 645 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 'குரூப் 2, குரூப் 2ஏ' தேர்வுகள் இன்று நடத்தப்பட உள்ளன.
மொத்தம், 1,905 தேர்வு மையங்களில் நடக்க உள்ள தேர்வில், 5 லட்சத்து 53,634 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களில், 3 லட்சத்து 41,114 பேர் பெண்கள். ஒரு பணியிடத்திற்கு, 858 பேர் போட்டி யிடுகின்றனர்.