தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய 'வுட் பால்' போட்டி எண்ணுார் மாணவர்கள் தேர்வு

தேசிய 'வுட் பால்' போட்டி எண்ணுார் மாணவர்கள் தேர்வு

தேசிய 'வுட் பால்' போட்டி எண்ணுார் மாணவர்கள் தேர்வு


UPDATED : மே 13, 2026 06:30 PM

ADDED : மே 13, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2026 06:30 PM ADDED : மே 13, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எண்ணுார்:
தேசிய அளவிலான 'வுட் பால்' போட்டிக்கு, எண்ணுார் ஆசான் துரை ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள், 31 பேர் தேர்வாகியுள்ளனர்.

'வுட் பால்' எனப்படுவது, கோல்ப் மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளின் அம்சங்களை இணைத்து விளையாடப்படும் ஒரு வெளிப்புற விளையாட்டு.

இதில், மரத்தால் செய்யப்பட்ட ஒரு பந்தை, ஒரு 'மாலட்' மூலம் அடித்து, குறிப்பிட்ட கதவு போன்ற இலக்கின் வழியாக குறைந்த அடிகளில் செலுத்த வேண்டும்.

அதன்படி, ஏப்., 17ம் தேதி, சேலம், ஜெய்ராம் பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் நடந்த, மாநில அளவிலான வுட் பால் போட்டியில், சென்னை, திருவள்ளூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கன்னியாகுமரி உட்பட, 24 மாவட்ட அணிகள் பங்கேற்றன.

இதில், எண்ணுார் துரை ஆசான் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்களான முகமது அல் பிரித்தோஸ், ஆகாஷ், பிரவீன் குமார், முகேஷ், வினிதா உட்பட, 31 பேர், பல்வேறு பிரிவுகளின் கீழ், தேசிய அளவிலான வுட் பால் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

தேசிய அளவிலான போட்டி, சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் கிருஷ்ண விகாஷ் குளோபல் பள்ளியில், மே 14 - 17ம் தேதிகளில் நடக்கிறது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us