தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் 'நீட்' மாதிரி தேர்வு

தினமலர் 'நீட்' மாதிரி தேர்வு

தினமலர் 'நீட்' மாதிரி தேர்வு


UPDATED : ஏப் 18, 2026 10:20 AM

ADDED : ஏப் 18, 2026 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 18, 2026 10:20 AM ADDED : ஏப் 18, 2026 10:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில், 'நீட்' தேர்வு குறித்த கருத்தரங்கம் மற்றும் மாதிரி தேர்வுகள், 'தினமலர்' நாளிதழ் சார்பில் நாளை நடக்க உள்ளன.

பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயரிய கனவுகளில் ஒன்று, மருத்துவம் படிப்பது. அதற்கு வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழ், ராஜலட்சுமி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, 'நீட்' மாதிரி தேர்வையும், அது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தையும் நடத்துகின்றன.

இந்நிகழ்ச்சி, நாளை காலை 08:00 மணி முதல் பகல் 01:30 மணி வரை, சென்னை அரும்பாக்கம், கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடக்கிறது.

மதிப்பீட்டு அறிக்கை

'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான ஆலோசனைகள், பாடங்களை புரிந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்களை நிபுணர்கள் வழங்குவர். ஒவ்வொரு மருத்துவ படிப்புக்கும் தேவையான தகுதிகள், மதிப்பெண்களின் அடிப்படையிலான வாய்ப்புகள், சிறந்த மருத்துவ கல்லுாரிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் நடத்தப்படும் 'நீட்' மாதிரி தேர்வில், தேசிய அளவிலான வினாக்கள் இடம் பெறும். இதனால், மாணவர்கள் தங்களின் திறனை அறிவதோடு, நுண்ணறிவையும் பெற முடியும். தேர்வின் அடிப்படையில் மதிப்பீட்டு அறிக்கை வழங்கப்படும். அதன் வாயிலாக, மாணவர்கள் தங்களின் பலம் மற்றும் பல வீனத்தை அறிய முடியும்.

விடை குறிப்பு

'நீட்' மாதிரி தேர்வு முடிவுகள், 48 மணி நேரத்திற்குள், உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும், 'நீட்' மாதிரி தேர்வு விடை குறிப்பு வழங்கப்படும்.

'வேதாந்து லேர்னிங் சென்டர்' இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தரும் வகையில், மாதிரி தேர்வில், முதல் 10 இடங்களை பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம்.

இந்நிகழ்ச்சியில் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கலந்து கொள்ள உள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், 'NEET' என 'டைப்' செய்து. 95667 77833 என்ற 'வாட்ஸாப்' எண்ணுக்கு அனுப்பலாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us