UPDATED : ஆக 05, 2013 12:00 AM
ADDED : ஆக 05, 2013 10:58 AM
திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், "குரூப்-4", தேர்வில் கலந்து கொள்ள இருக்கும் மனுதாரர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் இன்று துவங்குகிறது.
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், "குரூப்-4", தேர்வில் கலந்து கொள்ள இருக்கும் மனுதாரர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (5ம் தேதி) முதல் வரும், 20ம் தேதி வரை (சனி, ஞாயிறு தவிர), திருவள்ளூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்விற்கு விருப்பமுள்ள மனுதாரர்கள் உடனே, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பயனடையுமாறு, ஆட்சியர்
வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.