UPDATED : அக் 28, 2024 12:00 AM
ADDED : அக் 28, 2024 05:22 PM

சென்னை:
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதியவர்கள் tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in என்ற இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
டி.என்.பி.எஸ்.சி., குருப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல பதவிகளுடன் 6,244 காலியிடங்கள் இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், காலி பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரிக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து உள்ளனர். ஜூன் 9ம் தேதி எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.
தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில், இன்று(அக்.,28) மதியம் 1.55 மணியளவில் குரூப் 4 தேர்வு முடிவு வெளியானது. tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in என்ற இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.