தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தரமில்லாத 44 நிகர்நிலை பல்கலை அந்தஸ்து ரத்து?

தரமில்லாத 44 நிகர்நிலை பல்கலை அந்தஸ்து ரத்து?

தரமில்லாத 44 நிகர்நிலை பல்கலை அந்தஸ்து ரத்து?


UPDATED : ஜன 19, 2010 12:00 AM

ADDED : ஜன 19, 2010 09:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2010 12:00 AM ADDED : ஜன 19, 2010 09:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இவற்றில் பல பிரபல கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. தற்போது நாடு முழுவதும்  126 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்குரிய தரம் இல்லை என்றும், போதிய பயிற்சியற்ற பேராசிரியர்களை வைத்து, பாடங்கள் கற்பிப்பதாகவும் புகார் எழுந்தது. மேலும், இந்த பல்கலைக்கழகங்கள் விதிமுறைகளை மீறி நடப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து, விப்லவ் சர்மா என்ற வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


பேராசிரியர் பி.என்.டாண்டன் தலைமையில் ஆய்வு நடத்திய குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் ஜன. 18ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 1.19 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நிகர்நிலை பல்கலைகளில், 44 பல்கலைகளுக்கு நிகர்நிலை பல்கலைக்குரிய அந்தஸ்தை பெற தகுதியில்லை. இந்த பல்கலைகளில் விரும்பத்தகாத நிர்வாகம் நடக்கிறது. தகுதி வாய்ந்த பேராசிரியர் குழுவுக்கு பதிலாக, குடும்ப <உறுப்பினர்களால் பல்கலை நிர்வாகம் கட்டுப்படுத்தப்படுகிறது. வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டும் நெறிகளை மீறி செயல்படுவது தெரியவந்துள்ளது.


மேலும், பல்கலைக்கு சம்பந்தம் இல்லாத புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டு மொத்த நிகர்நிலை பல்கலைகளில், ஒரு சில பல்கலைகள் மட்டுமே, தங்களின் தரத்தை நிரூபிக்கும் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளன. எனவே,  விதிமுறைகளை மீறி செயல்பட்ட இந்த 44 நிகர்நிலை பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். இவற்றில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அங்கீகாரம் இழக்கும் பல்கலைகளில் படிக்கும் மாணவர்கள், தங்களின் கல்வியை தொடர வசதியாக, சம்பந்தப்பட்ட பல்கலைகள், முன்பு எந்த பல்கலையின் அங்கீகாரம் பெற்று இருந்ததோ, அந்த பல்கலையின் கீழ் பட்டம் பெறலாம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மற்றும் 17 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட உள்ளது.


அவை:


1. மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை.
2. செட்டிநாடு  ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம், காஞ்சிபுரம்.
3. டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை.
4. சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் மையம், சென்னை.
5. கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம், விருதுநகர்.
6. பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப மையம், தஞ்சாவூர்.
7. கடல் ஆராய்ச்சி மற்றும் கல்வி பயிற்சி மையம், சென்னை.
8. வேல்ஸ் அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப மையம், சென்னை.
9. கற்பகம்  உயர்கல்வி மையம், கோவை.
10. வேல்டெக் ரங்கராஜா டாக்டர் சகுந்தலா அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், சென்னை.
11. ஸ்ரீபாலாஜி வித்யாபீடம், புதுச்சேரி.
12. விநாயகா மிஷன், ஆராய்ச்சி மையம், சேலம்
13. பாரத் இன்ஸ்டிடியூட் ஆப் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை.
14. பொன்னையா ராமஜெயம் அறிவியல் தொழில்நுட்ப மையம், தஞ்சாவூர்.
15. ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம், ஸ்ரீபெரும்புதூர்.
16. செயின்ட் பீட்டர் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை.
17. நூருல் இஸ்லாம் உயர் கல்வி மையம், கன்னியாகுமரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us