தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 46 அரசு பள்ளிகளுக்கு அரசு வெரிகுட் சான்றிதழ்

46 அரசு பள்ளிகளுக்கு அரசு வெரிகுட் சான்றிதழ்

46 அரசு பள்ளிகளுக்கு அரசு வெரிகுட் சான்றிதழ்


UPDATED : மே 31, 2025 12:00 AM

ADDED : மே 31, 2025 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2025 12:00 AM ADDED : மே 31, 2025 10:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
கோவை வருவாய் மாவட்டத்தில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற 46 பள்ளிகளுக்கு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும், அதனைச் சாதிக்க உதவிய ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்பேரில், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

அதன்படி, கோவை வருவாய் மாவட்டத்தில், 46 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 23 மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும். 10ம் வகுப்பில் 34 உயர்நிலை மற்றும் 12 மேல்நிலைப் பள்ளிகள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில், ஆசிரியர்கள் தங்களது பாடங்களில் மேற்கொண்ட திட்டமிடல், புத்தாக்க முயற்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களின் பயன்படுத்தல் போன்ற செயல்பாடுகளுக்காக, இந்த பாராட்டுச் சான்றிதழ் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இதற்காக, கோவை வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த, 1,568 பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் 575 பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us