தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாமக்கலில் 4,950 பள்ளி செல்லா குழந்தைகள்

நாமக்கலில் 4,950 பள்ளி செல்லா குழந்தைகள்

நாமக்கலில் 4,950 பள்ளி செல்லா குழந்தைகள்


UPDATED : ஜூன் 26, 2023 12:00 AM

ADDED : ஜூன் 26, 2023 02:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2023 12:00 AM ADDED : ஜூன் 26, 2023 02:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 4,950 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,995 பேரை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 6 முதல் 12 வயதுடைய அனைத்து இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், இதுவரை பள்ளியில் சேராத குழந்தைகள், புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரையும், பள்ளியில் சேர்க்க பிறதுறை அலுவலர்களுக்கான, மூன்று அடுக்கு மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் நடந்தது.இதில் கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், 15 ஒன்றியத்திற்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், 2022-23ல் மேற்கொள்ளப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில், 4,950 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில், 2,995 குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். நாமக்கல் ஒன்றியத்தில் வார்டு எண், 37, 38 நரிக்குறவர் காலனி மற்றும் கீரம்பூர் சுரக்காபாளையம், எருமப்பட்டி ஒன்றியத்தில் பொட்டிரெட்டிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் ஒன்றியத்தில், சாலையூர், மலைவேப்பன்குட்டை, மல்லசமுத்திரம் ஒன்றியம், நாயக்கர் வளவு, ஜக்கம்மா தெரு, கபிலர்மலை ஒன்றியம், பல்லாபாளையம் ஆகிய பகுதிகளில், இடைநின்ற மாணவர்கள் அதிகம் உள்ளனர். இந்த பகுதிகளில் தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தைகள் உதவி மையம் மற்றும் போலீசார் இணைந்து களப்பணி மேற்கொண்டு, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் கீதா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us